கொழும்பு துறை முகத்திற்கு அருகாமையில் தீ பற்றிய எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் இந்தியா மற்றும் கட்டார் ஆகிய நாடுகளின் துறைமுகங்களில் சில கொள்கலன்களை இறக்கிய பின்னரே இலங்கைக்கு வந்ததாக இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.
இந்த கப்பல் தீப்பற்றியமை குறித்த விடயங்களை தெளிவுபடுத்துவதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (28) விசேட செய்தியாளர் சந்திப்பு இடம்பெற்றது.
இதனபோது, இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் இந்தியா மற்றும் கட்டார் நாடுகளின் இரண்டு துறைமுகங்களிலும் பிரவேசிப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்ட பின்னரே ,இங்குவந்ததாக வெளியிடப்பட்ட தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்று குறிப்பிட்டார்.
மேலும், இந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட கடற்படை தளபதி தெரிவிக்கையில் தற்போது இந்த கப்பல் இரண்டாக பிளவுபட்டு சிதறும் அனர்த்தம் இல்லை என்றும்,
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தத்திற்கு உள்ளானதையடுத்து இலங்கை சமுத்திர சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை முழமையாக மதிப்பீடு செய்யும் வரையில் துரித செயற்பாடாக உடனடி இழப்பீட்டு தொகையை அறவிடுவதற்கு தேவையான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக செய்தியாளர் மகாநாட்டில் கலந்துகொண்ட சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி தர்ஷனி லஹந்தபுர தெரிவித்தார்.









No comments