யாழ்ப்பாணம் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள ஒரு கிராமசேவகர் பிரிவை முடக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஜே/350 கிராமசேவகர் பிரிவில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 20 பேர் வரையில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சுகாதார பிரிவினால் முடக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கபப்ட்டுள்ளன.
எனினும் மாவட்ட கொவிட் தடுப்பு செயலணியின் ஒப்புதல் இதுவரையில் கிடைக்கவில்லை எனவும் அனுமதி கிடைத்தவுடன் முடக்கப்படும் எனவும் சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.







No comments