ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்ச எதிர்வரும் ஜூலை மாதம் 6ஆம் திகதி பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினரானதும் அவருக்கு நிதி மற்றும் பொருளாதார அமைச்சு பதவியை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச வழங்குவார் எனவும் அந்த தகவல்கள் மூலம் அறிய முடிகிறது என கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவுக்குச் சென்றிருந்த பசில் ராஜபக்ச, நேற்று காலை நாடு திரும்பினார். அவர் சுகாதார வழிகாட்டல்களின் கீழ் தற்போது வீட்டில் சுயதனிமைப்படுத்தலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது







No comments