யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் அமைந்துள்ள வெள்ளநீர் வடிகால் பிளாஸ்ரிக் கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளால் நிரம்பி காணப்பட்ட நிலையில் அவற்றை துப்பரவு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த வடிகால் கழிவுகள் நிறைந்து காணப்படுவதாக யாழ்.மாநகர் சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனுக்கு அப்பகுதி மக்கள் முறையிட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற முதல்வர் அவற்றை பார்வையிட்டதுடன் உடனடியாக யாழ்.மாநகர சபை தூய்மைப்படுத்தும் தொழிலாளிகளுக்கு அறிவித்து வாய்க்காலை துப்பரவு செய்ய நடவடிக்கை எடுத்தார். www.tamilnews1.com
இதேவேளை, மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வெள்ளநீர் வாய்க்கால்களை துப்பரவு செய்து வரும் நிலையில் , துப்பரவு செய்யப்பட்ட வாய்க்கால்களுக்குள் ஓரிரு கிழமைக்குள் கழிவுகளை பொறுப்பற்ற சிலர் கொட்டி வருகின்றனர். www.tamilnews1.com
இந்நிலைமை எமக்கு கவலை அளிக்கின்றது. யாழ்.மாநகர தூய்மைப்படுத்தும் தொழிலாளிகள் போதிய இயந்திர வலுக்கள் அற்ற நிலையில் பல சிரமங்களுக்கு மத்தியில் மனித வலு மூலமே துப்பரவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே அவர்களின் அர்ப்பணிப்பான தொழிலை மதித்தாவது துப்பரவு செய்த வாய்க்காலுக்குள் கழிவுகளை கொட்ட வேண்டாம் என முதல்வர் கோரியுள்ளார்.
www.tamilnews1.com










No comments