Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

போலி ஆவணங்களை சமர்ப்பித்து பிரான்ஸ் செல்ல முற்பட்ட மாங்குள பெண் கைது!


பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட போலி ஆவணங்களை சமர்ப்பித்து கட்டார் ஊடாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட பெண்ணொருவர் குடிவரவு - குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். www.tamilnews1.com 

மாங்குளம் பகுதியை சேர்ந்த 25 வயதுடைய பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார். www.tamilnews1.com 

குறித்த பெண் இன்றைய தினம் (18) அதிகாலை கட்டார் நோக்கி புறப்பட்ட விமானத்தில் பயணிக்க  கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு - குடியகல்வு அதிகாரிகளிடம் தனது ஆவணங்களை ஒப்படைத்துள்ளார். 

அவற்றை அதிகாரிகள் பரிசோதித்த போது , அவை போலியான ஆவணங்கள் என்பதனை கண்டறிந்து அப்பெண்ணை கைது செய்துள்ளனர்.

குறித்த பெண் சமர்ப்பித்த ஆவணங்களில் பி.சி.ஆர் பரிசோதனை ஆவணமும் போலியானது என அதிகாரிகள் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்ட பெண்ணை தடுத்து வைத்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

No comments