வெலிகமவில் உள்ள பொல்வதுமோதரை கடற்கரை பகுதியில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 219 கிலோ கிராமுக்கு அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதி ஆயிரத்து 758 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடல் வழியாக நாட்டிற்குள் கடத்தப்பட்ட ஹெராயின் போதைப்பொருளுடன் 09 சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
மீன்பிடிப் படகுகள் மூலம் ஹெராயின் கடத்தப்பட்டு பின்னர் வெலிகமவில் உள்ள பொல்வதுமோதரா பகுதியிலிருந்து ஒரு டிங்கி படகை பயன்படுத்தி பிரதான நிலப்பகுதிக்கு கொண்டு செல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அதன்போதே 219 கிலோ 800 கிராம் ஹெராயின், டிங்கி படகு மற்றும் எரிவாயு சிலிண்டர்கள் கைப்பற்றட்டன.இந்த கடத்தலில் ஈடுபட்ட ஒன்பது சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் பணியகம் இணைந்து சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.







No comments