Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பிள்ளைகளால் கைவிடப்பட்ட தாய் - அவஸ்தைக்கு உள்ளாகியுள்ள அயலவர்கள்


கோப்பாயில் பிள்ளைகளால் கைவிடப்பட்ட தாயால் நாளாந்தம் அவஸ்தைக்கு உள்ளாகும் அயல் வீட்டுக்காரர் பிள்ளைகளை முறையாகப் பார்க்குமாறும் அல்லது தாயை வயோதிபர் இல்லத்தில் கொண்டு போய் விடுமாறும் கோரி நிற்கின்றனர்.

தாயின் நிலைமை தொடர்பில் பிள்ளைகளிடம் அயல்வீட்டுக்காரர் தெரிவித்தும் பலன் கிடைக்காத நிலையில் தீர்வை கோரி கிராமசேவகர், பிரதேச செயலரிடம் முறையிட்டனர். 

அவர்களும் வயது போன தாய் என்பதாலோ அல்லது தாயின் ஒரு மகன் அந்தப் பிரதேச செயலகத்தில் பியோனாக வேலை செய்வதாலோ என்னவோ நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் அயல்வீட்டுக்காரர் கோப்பாய் பொலிஸ் நிலையம் சென்று முறையிட்டுள்ளனர். 

பிள்ளைகளை பொலிஸ் நிலையம் அழைத்து தாயை பார்க்குமாறு பொலிஸார் அறிவுரை  கூறிய போது பிள்ளைகள் அயல்வீட்டார் மீது வேண்டாத பழி சுமத்தினர் தாய்க்கு அடிப்பதாகவும்,  கல்லால் எறிவதாகவும் குற்றம் சுமத்தினர். வயது போய் தானாக விழுந்த தாயின்  பல்லை கல்லால் எறிந்து விழுத்தியதாகவும் பொய் குற்றச்சாட்டை முன்வைத்தனர். 

ஆனாலும் அயல்வீட்டுக்காரரின் வீடியோ ஆதாரங்களைப் பார்த்த பொலிஸார் உங்களிடம் ஏதாவது ஆதாரம் இருக்கா என்று கேட்டனர். பிள்ளைகள் இல்லை என்றனர். தாயை உளநல வைத்தியரிடம் கூட்டிச் சென்றதாகவும் தெரிவித்தனர். 

பியோன் வேலை பார்ப்பதால் காலை 7 மணிக்கு அலுவலகம் சென்று மாலை 7 மணிக்கு திரும்புவதாகவும் இரு பிள்ளைகள் தெரிவித்த போது. வேலையோ வேலை இல்லையோ தாயை பார்க்க வேண்டியது பிள்ளைகளின் கடமை என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். ஆனால் அன்றிரவே பிள்ளைகள் தாயுடன் தங்காத நிலையில் தாய் அயல்வீட்டுக்காரரை நிம்மதியாக தூங்கவிடவில்லை. 
 
இரு வருடங்கள் கடந்து முடிவில்லாமல் தொடரும் தாய்க்கு என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்
 
கோப்பாய் மத்தி கோப்பாயைச் சேர்ந்த கோதண்டபாணி அமுதமணி (வயது 79) என்ற இந்த தாய்க்கு 3 மகன்கள். மூத்தவர் கூட்டுறவு சங்கக்கடையிலும், இரண்டாவது மகன் கோப்பாய் பிரதேச செயலக பியோனாகவும், மூன்றாவது மகன் யாழ்.மாவட்ட செயலக பியோனாகவும், இருக்கின்றனர். 3 பேரும் திருமணம் முடித்து அவர்களின் மனைவி வீடுகளில் தங்கினர். அப்பொழுது தான் பிரச்சினை எழுந்தது. தனிமையில் இருந்த  தாய் பிள்ளைகள் தன்னுடன் இருந்து பார்க்காததால், பிள்ளைகள் திருமணம் முடித்து இன்றுவரை 3 மருமகள்களில் ஒரு மருமகள் கூட வீட்டுக்கு வந்து இருந்ததில்லை. உணவை சமைத்து அனுப்பிவிடுகின்றனர். விரக்தியில் அயல்வீட்டுக்காரர் தன்னை பார்த்தால் என்ன என்று அயல்வீட்டுக்காரரை எதிர்பார்த்தார். 
 
அயல்வீட்டுக்காரரின் முன் வீட்டில் தனிமையில் ஒரு வயோதிப பெண்  வாழ்ந்து வருகிறார். அந்த வயோதிபப் பெண்ணுக்கு தேவையான உதவிகளை அயல்வீட்டுக்காரர் செய்து வருகிறார்கள். இதனைப் பார்த்த பின் வீட்டில் இருக்கும் இந்த தாயும் தனக்கும் உதவி செய்தால் என்ன என்று எதிர்பார்த்தார். 
 
அது முடியாது என்று அறிந்ததும். அயல்வீட்டுக்காரரை பிரச்சனைக்குள் இழுத்தார். முதலில் புகைபோடுகிறார்கள் என்று சத்தமாக கத்தத் தொடங்கிய தாய். பின்னர் புகையால் தனது முகமே கருகிப் போய்விட்டது என்றார். பலர் இந்த வயோதிப தாயின் வீட்டுக்கு சென்று அறிவுரை கூறிய போது புகைபோடுகிறார்கள் என்று எவரும் ஏற்காத காரணத்தை கூறினார்.
 
அயல்வீட்டுக்காரர் தமது வீட்டில் நின்றால் அவர்களை திட்டுவதில் பின்நிற்கவில்லை. தமது வீட்டு வளவை அவர்கள் துப்பரவு செய்தால், வீட்டை கூட்டுறாங்கள் என்றும் ,அவர்கள் குளித்தால், குளிக்கிறாங்கள் என்றும், சமையலின் போது முகட்டால் புகை வருவதைக் கண்டால், நல்லாய் சமைத்து சமைத்து சாப்பிடுதுகள் என்றும், ஊரில் வடிவு காட்டுறாங்கள் என்றும், அயல்வீட்டுக்காரர் ஊரில் நிகழ்வுகளுக்கு சென்று வந்தாலும் அங்க பொகுதுகள்,  இங்கே போகுதுகள் என்று சூசண வார்தைகளால் திட்டித் தீர்ப்பார். 
 
அயல்வீட்டுக்காரர் குளிக்கிற சத்தம் கேட்டால் தகரவேலி என்று கூடப் பார்க்காமல் ஆடு  வேலிக்குள் தலையை ஓட்டுவது போல் தாய் வேலிக்குள் தலையை செருகி அயல்வீட்டைப் பார்க்கிறார் என்றால் சும்மாவா.
 
அயலவரின் வீட்டு தகரவேலியை கத்தியால் வெட்டுவது மட்டுமல்ல வேலிக்கு திருநீறு போடுவது, இரவு நித்திரையில்லாமல் வேலி அருகே நடமாடுவது வரை தாயின் தனிமையின் கொதிப்பு தெரிகிறது.
 
தாயின் சத்தம் அதிகமாக இருந்தால் ஊரவர்கள் சொல்லி கேள்விப்பட்டு இரண்டு அல்லது மூன்று நாட்கள் பிள்ளைகள் தாயுடன் தங்குவார்கள். பின்னர் தாயின் சத்தம் தொடரும். 
 
புகை தான் காரணம் என்று சொல்லி வந்தவர்கள். பின்னர் தாய்க்கு வருத்தம் என்று சொன்னார்கள். பின்னர் அயலவர்களால் தான் பிரச்சனை என்கிறார்கள். 
 
தாய்க்கு மூன்றுவேளையும் சாப்பாடு கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் போவதே பிள்ளைகளின் பார்வையாக இருந்ததே ஒழிய தாயின் வீட்டில் ஒருவராவது தங்கி தாயைப் பார்க்க முடியவில்லை. 
 
இதனால் தாயை பார்க்காமல் விட்டுவிட்டு அயலவர்கள் சீண்டுகிறார்கள் என்று சாட்டு போக்கு காரணம் கூறி வருகின்றனர். பிள்ளைகள்  தாயுடன் இல்லாத காரணத்தால் தான் தாயின் நிலைமை மோசமாகப் போகிறது என்பதை ஏற்க மறுக்கிறார்கள்.
 
பொலிஸ் நிலையம் பிரச்சினை சென்றதும் அயல்வீட்டுக்காரரால் தான் தாய்க்கு பிரச்சினை என்று சொல்லி தப்பிக்க முயன்றனர். இதனால் தாயின் நிலைமையை இன்னும் மோசமடையச் செய்யவுள்ளனர் என்பது மனவருத்தத்திற்குள்ளான செயலாகும்.

No comments