கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலையில் தடுப்பூசி பெற்றுக் கொண்ட ஊழியர்களில் இன்றைய தினம் மதியம் வரையில் 48 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தொிவித்திருக்கின்றன.
ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களிற்கு நேற்றைய தினம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அந்நிலையில் இன்று காலை வழமை போன்று தொழிற்சாலைக்கு வருகைதந்த ஊழியர்கள் திடீர் சுகவீனம் அடைந்த நிலையில் தொழிற்சாலை பேருந்து மற்றும் வாகனங்களில் வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டு , அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காலை முதல் மதியம் வரையில் 48 பேர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த நோயாளர்களில் அபாயகரமான தாக்கத்தில் எவரும் அடையாளம் காணப்படவில்லை எனவும், சாதாரண நோயாளர் விடுதிகளில் அவர்கள் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை வட்டாங்கள் தெரிவிக்கின்றன.
தடுப்பூசி ஒவ்வாமையால் தான் ஊழியர்கள் சுகவீனம் அடைந்துள்ளனர் என கூறப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பில் சுகாதார பிரிவினர் எந்த தகவலையும் மதியம் வரையில் வெளியிட வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.







No comments