Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

2021 தேருநர் கணக்கெடுக்கும் பணி யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்!


2021 ஆம் ஆண்டுக்கான தேருநர்களை கணக்கெடுக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பில் செயலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

நாட்டின் தற்போதைய நிலமை காரணமாக வீடுவீடாக பி.சீ படிவங்களை வழங்கி கணக்கெடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படமாட்டாது.

கடந்த ஆண்டுக்கான தேருநர் இடாப்பில் தேவையான மாற்றங்களை மட்டும் மேற்கொள்வதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேருநர் இடாப்பில் ஜூன் முதலாம் திகதி 18 வயதை நிறைவு செய்தமை, புதிதாக வதிவுக்கு வந்தமை போன்ற காரணங்களால் புதிதாக பெயர்கள் சேர்க்கப்பட வேண்டியவர்கள் அல்லது இறப்பு, வதிவுமாறிச் சென்றமை போன்ற காரணங்களால் பெயர்களை நீக்க வேண்டியவர்கள் வீடுகளில் இருந்தால் 2021.07.22 ஆம் திகதிக்கு முன் கிராம அலுவலரை நேரடியாக அல்லது தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு 2021 ER படிவத்தினைப் பெற்று முழுமைப்படுத்தி மீள கையளித்தல் வேண்டும்.

பிரதேச செயலகங்களிலும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தளமாற elections.gov.lk என்ற முகவரியில் குறித்த படிவத்தினை பெற்று முழுமைப்படுத்தி கிராம அலுவலரிடம் சமர்ப்பிக்க முடியும்.

2020 ஆம் ஆண்டு தேருநர் இடாப்பில் பெயர் பதியப்படாத முழுமையாக அல்லது பகுதியளவில் மீளக்குடியமர அனுமதிக்கப்படாத கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் தாம் வதியும் கிராம அலுவலரிடம் அல்லது தேர்தல்கள் அலுவலகத்திற்கு விண்ணப்பிப்பதன் மூலம் உரிய கிராம அலுவலர் பிரிவுகளில் தமது பதிவுகளை மேற்கொள்ள முடியும் – என்றுள்ளது

No comments