கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட கொரோனா தடுப்பூசி ஒவ்வாமை காரணமாக 25க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் நேற்றையதினம் போடப்பட்டிருந்தன. அந்நிலையில் இன்றைய தினம் காலை 25க்கும் மேற்பட்ட ஊழியர்கள் திடீர் சுகவீனமடைந்துள்ளனர்.
அந்நிலையில் அவர்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நேற்றைய தினம் வழங்கப்பட்ட தடுப்பூசியினால் ஒவ்வாமை ஏற்பட்டு உள்ளதாக முதல் கட்ட தகவல்கள் மூலம் அறிய முடிகிறது. மேலதிக விபரங்களை அறிய முடியவில்லை.
ஒளிப்படங்கள் :- நன்றி சங்கரி (கிளிநொச்சி ஊடகவியலாளர்)











No comments