யாழ்.மாவட்டத்திற்கு 2ம் கட்ட தடுப்பூசி எதிர்வரும் 10ம் திகதி முன்னர் கிடைக்கும் என மாவட்டச் செயலர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், www.tamilnews1.com
யாழ்ப்பாணத்திற்கு கிடைத்த முதல் கட்ட தடுப்பூசிகளை மக்கள் ஆர்வத்துடன் பெற்றுள்ள நிலையில் இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் எமக்குக் கிடைக்கக் கூடியவாறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. www.tamilnews1.com
இதேவேளை நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை 3600 கொரோனா நோயாளிகள் யாழ்.மாவட்டத்தில் இனங்காணப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 48 இறப்புக்களும் பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் 2965 குடும்பங்களைச் சேர்ந்த 7936 நபர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற 5000 ரூபா கொடுப்பனவு நேற்றுவரை சுமார் 59000 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சமுத்தி பயனாளிகள், மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தவர்கள் மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கு முதற்கட்டமாக கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகிறது. தெரிவு செய்யப்பட்ட ஏனையவர்களுக்கும் நிதி கிடைத்தவுடன் அவர்களுக்கும் வழங்குவோம் என மேலும் தெரிவித்தார். www.tamilnews1.com
www.tamilnews1.com







No comments