மணல் காசு வாங்குவதற்காக முச்சக்கர வண்டியில் வீதியால் சென்றவரை வேண்டுமென்றே அழைத்து அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு அவரை படுகொலை செய்துள்ளனர் என உயிரிழந்தவரின் சகோதரி தெரிவித்தார். www.tamilnews1.com
மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் வீட்டிற்கு முன்னால் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மட்டக்களப்பு ஊரணியை பகுதியை மகாலிங்கம் பாலசுந்தரம் (வயது 34) என்பவர் உயிரிழந்தார். www.tamilnews1.com
சம்பவம் தொடர்பில் அவரது சகோதரி தெரிவிக்கையில் ,
இரண்டு நாட்களுக்கு முன்னர் மணல் கொண்டே ஒரு வீட்டுக்கு இறங்கியுள்ளார். அதன் போது அவரது வாகனம் வீதியில் நின்றதால் , மெய்ப்பாதுகாவலர் வந்து வாகனத்தை உடனே எடுக்குமாறு பணித்துள்ளார்.
அதன் போது மணல் இறக்கி முடியுது , ஓரிரு நிமிடத்தில் வாகனத்தை எடுத்து விடுகிறேன் என கூறியுள்ளார். அதற்கு மெய்ப்பாதுகாவலர் வாகனத்தின் டயரை சேதப்படுத்தியுள்ளார். www.tamilnews1.com
இந்நிலையில் நேற்றைய தினம் மணல் கொண்டே இறக்கியவர்களிடம் பணம் வாங்கவே சென்று இருந்தார். அதன் போதே அவரை அழைத்து சுட்டுகொன்றுள்ளார்கள். www.tamilnews1.com
தவறுதலான துப்பாக்கி சூட்டில் சிக்கி உயிரிழந்திருந்தால் கூட ஓரளவு மனம் தாங்கி கொள்ளும். இது எனது கணவரை வேண்டும் என்றே அழைத்து அவரை சுட்டு படுகொலை செய்துள்ளனர். இதனை என்னால் மன்னிக்கவே முடியாது. என தெரிவித்தார். www.tamilnews1.com
இதேவேளை உயிரிழந்தவர் பயணித்த முச்சக்கரவண்டியின் சாரதியும் உயிரிழந்தவரின் நண்பனுமான விஜயராஜா தெரிவிக்கையில்,
நானும் பாலசுந்தரமும் நண்பர்கள். சம்பவதினமான நேற்று அமைச்சரின் வீடு அமைந்துள்ள வீதியிலுள்ள வீடு ஒன்றில் மண் வியாபாரம் தொடர்பாக முச்சக்கரவண்டியில் சென்று கதைத்து விட்டு திரும்பிவரும் போது அமைச்சரின் வீட்டின் முன்பகுதியிலுள்ள வெற்றுக்காணியிலுள்ள மரம் ஒன்றில் மெய்ப்பாதுகாவலர் இருந்தார். www.tamilnews1.com
இதன்போது அவரை கண்டு முச்சக்கரவண்டியை நிறுத்துமாறு எனது நண்பன் கோரினார் நான் நிறுத்தாமல் சென்றேன். இருந்த போதும் நண்பன் முச்சக்கரவண்டியை திருப்பி எடுங்கோ பொலிஸார் கூப்பிடுவதாகவும் கதைத்துவிட்டு போவோம் என்றார்.
அதனையடுத்து நான் முச்சக்கரவண்டியை திருப்பிக்கொண்டு அமைச்சரின் வீட்டின் முன்னால் வீதியில் நிறுத்தியபோது வீதிக்கு வந்த மெய்ப்பாதுகாவலருக்கும் நண்பனுக்கும் இடையில் வாய்த்தர்கம் ஏற்பட்டது.
இதனையடுத்து மெய்ப்பாதுகாவலர் நண்பனை கழுத்தில் கையை வைத்து தள்ளிக் கொண்டுபோனபோதும் நான் யாரு என்று தெரியுமா ? பொலிஸ் என துப்பாகியை மெய்ப்பாதுகாவலர் எடுத்ததும் வெடித்தது.
இதனையடுத்து மெய்ப்பாதுகாவலர் நண்பனை கழுத்தில் கையை வைத்து தள்ளிக் கொண்டுபோனபோதும் நான் யாரு என்று தெரியுமா ? பொலிஸ் என துப்பாகியை மெய்ப்பாதுகாவலர் எடுத்ததும் வெடித்தது.
நண்பன் கீழே வீந்துள்ளான். இரத்தம் வெளியேவந்தது. அதன் பின்னர் எனது முச்சக்கரண்டியில் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றேன்.
அதேவேளை மூன்று தினங்களுக்கு முன்னர் மெய்பாதுகாவருடன் நண்பனுக்கு பிரச்சினை நடந்திருக்கின்றது எனக்கு அதுபற்றி தெரியாது என்றார்.
அதேவேளை மூன்று தினங்களுக்கு முன்னர் மெய்பாதுகாவருடன் நண்பனுக்கு பிரச்சினை நடந்திருக்கின்றது எனக்கு அதுபற்றி தெரியாது என்றார்.
இதேவேளை நேற்றைய தினம் மெய்ப்பாதுகாவலர் துப்பாக்கி சூடு நடத்திய பின்னர் பொலிஸாரிடம் சரணடைந்த போது வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மெய்ப்பாதுகாவலரை பொலிஸார் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் இன்றைய தினம் முற்படுத்திய போது , எதிர்வரும் 06ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
www.tamilnews1.com








No comments