கடந்த 24 மணிநேரத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களால் 11 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
நாளொன்றில் 11 மரணங்கள் பதிவாகின்றமை சாதாரணமான ஒரு நிலமை அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர்களுள் பாதசாரிகள் இருவர், மோட்டார் சைக்கிளில் பயணித்த 6 பேர், சைக்கிளில் பயணித்த 2 பேர் மற்றும் லொறியில் பயணித்த ஒருவரும் உள்ளடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பாதசாரிகளே அதிகளவில் விபத்துக்களால் உயிரிழப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்







No comments