இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் பாதுகாப்பு உத்தியோகத்தர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் டிப்பர் வாகனச் சாரதி ஒருவர் உயிரிழந்த நிலையில் , வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்னால் மக்கள் கூடி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களுடன் அங்கிருந்த சிலர் முரண்பட்டு ஊடகவியலாளர்களை தாக்கவும் முற்பட்டுள்ளனர். அங்கிருந்த ஏனையவர்கள் ஊடகவியலாளர்களை பாதுகாத்துள்ளனர்.
குறித்த சம்பவங்களால் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக பதட்டமான சூழல் காணப்படுவதாகவும் , தற்போது பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.







No comments