யாழ்.மாவட்டத்தில் 65 பேர் உட்பட வடக்கில் 189 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தேசிய கொவிட் தடுப்புக்கான செயற்பாட்டு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி யாழ்.மாவட்டத்தில் 65 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் 56 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 29 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 24 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் 15 பேருக்குமாக 189 பேருக்கு வடமாகாணத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக செயற்பாட்டு மையத்தின் நாளாந்த நிலவர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.









No comments