Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில் 8 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில் - இரண்டு கிராமங்கள் முடக்கம்!


யாழ் மாவட்டத்தில்  2 ஆயிரத்து 721 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில் உள்ளதாக யாழ் மாவட்ட செயலர்  கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில் , 

யாழ் மாவட்டத்தில் இதுவரை 72 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.  4ஆயிரத்து 919 தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். அதில் 3 ஆயிரத்து 696 பேர் சிகிச்சை பெற்று நலமாகி வீடு திரும்பியுள்ளனர். 

தற்போது உடுவில் மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுகளில் இரண்டு கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு மாவட்டத்தில் தற்போது 2 ஆயிரத்து 721 குடும்பங்களை சேர்ந்த 8 ஆயிரத்து 71 நபர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளர்.

மேலும் நாட்டில் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு தற்போது வழங்கட்டுவரும் ஐந்தாயிரம் ரூபா கொடுப்பனவு யாழ் மாவட்டத்தில் இதுவரை 71 ஆயிரத்து 721 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது  என தெரிவித்துள்ளார்.

No comments