கொழும்பு கல்கிசை பகுதியில் 15 வயது சிறுமியை தடுத்து வைத்து , இணையத்தளம் ஊடாக விளம்பரப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கிசை பகுதியில் உள்ள தொடர் மாடி குடியிருப்பில் 15 வயது சிறுமியை தடுத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த நபர் ஒருவரை கல்கிசை பொலிஸார் கைது செய்திருந்தனர். www.tamilnews1.com
கைது செய்யப்பட்ட நபர் விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் , அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சிறுமியை பாலியல் தொழிலுக்கு அழைத்து சென்ற குற்றச்சாட்டில் 26 வயதுடைய பெண்ணொருவரை நேற்றைய தினம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணை நீதிமன்றில் பொலிஸார் முற்படுத்தியதை அடுத்து மன்றின் உத்தரவுக்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். www.tamilnews1.com
குறித்த சிறுமி சுமார் 4 மாத கால பகுதியாக தடுத்து வைக்கப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார் எனவும் , சிறுமியுடன் பாலியல் தொடர்பினை பேணியவர்கள் , மற்றும் அக்குற்ற செயலுடன் தொடர்புடைய நபர்கள் தொடர்பில் விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். www.tamilnews1.com







No comments