நாட்டில் தற்போது அமுலில் உள்ள முழு நேர பயணத்தடையை எதிர்வரும் ஜுலை 2ஆம் திகதி வரை அமுல் படுத்துமாறு சுகாதார பிரிவினர் அரசிடம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. www.tamilnews1.com
கடந்த மாதம் 25ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் முழுநேர பயணத்தடை அமுலில் உள்ளது. குறித்த பயணத்தடை முதலில் 7ஆம் திகதி நீக்குவதாகவும் , பின்னர் அது நீடிக்கப்பட்டு 14ஆம் திகதி (நாளை) நீக்குவதாகவும் இதுவும் தற்போது நீடிக்கப்பட்டு எதிர்வரும் 21ஆம் திகதி நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. www.tamilnews1.com
இந்நிலையில் எதிர்வரும் 24ஆம் திகதி பொசன் என்பதனால் மக்கள் சமய வழிபாடுகள் என கட்டுப்பாடு இன்றி செயற்படலாம் என எதிர்வு கூர்ந்து தற்போது அமுலில் உள்ள பயணத்தடையை 21ஆம் திகதி நீக்காது , எதிர்வரும் ஜூலை 02ஆம் திகதி வரையில் அமுல் படுத்துமாறு மருத்துவத்துறையினர் உள்ளிட்ட சுகாதார பிரிவினர் அரசிடம் கோரியுள்ளனர் எனவும் , அதனை அரசு கவனத்தில் கொண்டு அது தொடர்பில் பரிசீலனை செய்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. www.tamilnews1.com
www.tamilnews1.com







No comments