நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகில் மீன் வியாபாரம் செய்த ஆறு வியாபாரிகள் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். www.tamilnews1.com
தற்போதைய பயணத்தடை காலத்தில் நடமாடும் வியாபாரத்துக்கு மட்டுமே அனுமதியளித்துள்ள நிலையில் தேவையற்ற வகையில் மக்களை ஒன்று திரட்டி மீன் வியாபாரம் செய்தனர் என்ற குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாண பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
அத்துடன் அத்துடன் அவர்கள் வியாபாரத்துக்கென வைத்திருந்த மீன்கள் மற்றும் அது சம்பந்தமான வியாபார பொருட்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. www.tamilnews1.com
நல்லூர் பிரதேசசபையால் ஏற்கனவே இவ்வாறான வியாபார நடவடிக்கைகளை மக்களை திரட்டி செய்ய வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டு வந்தநிலையில் தொடர்ச்சியாக அப்பகுதியில் வியாபாரம் மேற்கொண்ட நிலையில் இன்றைய தினம் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
www.tamilnews1.com








No comments