அமெரிக்காவில் ஊடகத் துறையின் உயர் விருது, அந்தத் துறை சாராத கறுப்பின இளம் பெண் ஒருவருக்கு வழங்கப்படுகிறது. www.tamilnews1.com
உலகெங்கும் அதிர்வை ஏற்படுத்தியகறுப்பின மனிதர் ஜோர்ஜ் புளொய்ட்டின் (George Floyd) கொலையின் போது வெள்ளை இனப் பொலீஸாரால் அவர் கைது செய்யப்பட்ட காட்சியைத் தனது தொலைபேசியில் பதிவு செய்து அவரது மரணத்தின் முக்கிய ஆதார சாட்சியாக மாறியவர் டார்னெல்லா பிரேஷியர் (Darnella Frazier) என்னும் 18 வயது யுவதி. www.tamilnews1.com
அவர் பதிவு செய்த சிறிய வீடியோ காட்சி உலகெங்கும் வெளியாகி இன நீதிக்கான பெரும் போராட்டங்கள் வெடிக்கக் காரணமாகியது.தக்க தருணத்தில் அந்த யுவதி செய்த துணிகரச் செயலுக்கான சான்றாக ‘புலிட்ஸர்’ (Pulitzer Prize) என்கின்ற ஊடகத் துறை கௌரவ விருது அவருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. www.tamilnews1.com
“பத்திரிகையாளர்களின் உண்மை மற்றும் நீதிக்கான தேடுதல்களில் சாதாரண சிவிலியன்களது பங்கு எத்தகையது என்பதற்கு யுவதியின் செயல் ஓர் எடுத்துக்காட்டு” என்று “புலிட்ஸர்” விருதுக் குழு தெரிவித்திருக்கிறது.
www.tamilnews1.com







No comments