Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

முக கவசம் இன்றி பொது நிகழ்வில் வடக்கு ஆளுநர்!


யாழ்.கலாச்சார மத்திய நிலையம் மற்றும் யாழ்.மத்திய கல்லுாரி ஆகியவற்றுக்கு அமைச்சர் நாமல் ராஜபக்ஸ பார்வையிடுவதற்காக சென்றிருந்த நிலையில், வடமாகாண ஆளுநர் பி எஸ் எம் சாள்ஸ் முககவசம் அணியாமல் கலந்து கொண்டுள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச யாழ்ப்பாணம் வருகை தந்த நிலையில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார். இந்நிகழ்வில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது வடமாகாண ஆளுநர் கலந்து கொண்டமையை அவதானிக்க முடிந்தது.

முக கவசம் அணிவது கட்டாயமானது. முக கவசங்களை சரியான முறையில் அணியாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படட்டு வருகின்றன. 

நாடளாவிய ரீதியில் தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் முக கவசங்களை அணியாதமைக்காகவும் , ஒழுங்கான முறையில் முக கவசம் அணியவில்லை எனும் குற்ற  சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில் பொது நிகழ்வொன்றில் ஆளூநர் முக கவசம் அணியாது கலந்து கொண்டுள்ளார்.இது தொடர்பில் பொலிஸாரோ , சுகாதார பிரிவினரே எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பலரும் விசனம் தெரிவித்தனர் 

No comments