தனிநபர் கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்பட்ட அளவிலும் பார்க்க அதிகளவான மதுபானப் போத்தல்களை உடமையில் எடுத்து என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். www.tamilnews1.com
யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஐவரிடமும் 90 மதுபானப் போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சுமார் ஒரு மாத காலத்தின் பின்னர் இன்று மதுபான சாலைகள் திறக்கப்பட்டன. இதன்போதே 10 மதுபானப் போத்தல்களுக்கு மேல் கொள்வனவு செய்து எடுத்துச் சென்ற ஐவரே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். www.tamilnews1.com
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவில் மூவரும் கோப்பாய் பொலிஸ் பிரிவில் ஒருவரும் சுன்னாகம் பொலிஸ் பிரிவில் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்கள் மேலதிக நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். www.tamilnews1.com







No comments