யாழ்ப்பாணத்தில் இருந்து அனுராதபுரத்திற்கு மீன் ஏற்றி சென்றவர்கள் , வாகனத்தில் கஞ்சா போதை பொருளையும் கடத்தி சென்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆனையிறவு சோதனை சாவடியில் குறித்த வாகனத்தை பொலிஸ் விசேட அதிரடி படையின் இடைமறித்து சோதனைக்கு உட்படுத்திய போதே கஞ்சாவை மீட்டுள்ளனர்.
இன்றைய தினம் புதன்கிழமை இரவு நடைபெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணத்தில் இருந்து அனுராத புரம் பகுதிக்கு பட்டா ரக வாகனத்தில் மீன்களை ஏற்றி சென்ற நபர்கள் அதனுடன் 4கிலோ 200 கிராம் கஞ்சா போதை பொருளையும் கடத்தி சென்றுள்ளனர்.
இது குறித்து கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு தகவல் கிடைக்கப்பெற்ற நிலையில் ஆனையிறவு சோதனை சாவடியில் குறித்த வாகனத்திற்காக காத்திருந்து வாகனம் சோதனை சாவடியை அண்மித்த போது இடைமறித்து சோதனையில் ஈடுபட்டனர்.
அதன் போது கஞ்சா போதை பொருளை மீட்டனர். அதனை அடுத்து வாகன சாரதியையும் , உதவியாளரையும் கைது செய்து கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். அத்துடன் அவர்கள் பயணித்த வாகனம் மற்றும் வாகனத்தில் இருந்து மீட்கப்பட்ட கஞ்சா போதை பொருள் என்பவற்றையும் பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.






No comments