Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

குழந்தைக்கு மது குடிக்க வழங்கி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தவர் கைது!


 குழந்தை ஒன்றுக்கு மதுபானத்தை வழங்கி ,அதனை குடிக்க வைத்து , காணொளி எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த 25 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். 

பெலியகோட பகுதியை சேர்ந்த இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார். 

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, 

குறித்த பகுதியில் வசிக்கும் இளைஞன் 4 வயது குழந்தை ஒன்றுக்கு பியர் ரின் ஒன்றினை வழங்கி , அதனை குழந்தை குடிக்கும் காட்சியை காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். 

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் குறித்த இளைஞனை கைது செய்துள்ளனர். 

No comments