முல்லைத்தீவு பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு சுவாமி தோட்ட பகுதியில் உள்ள தென்னந்தோட்டத்தை துப்பரவு செய்து குப்பைகளுக்கு தீ மூட்டிய போதே குப்பைக்குள் இருந்த வெடிபொருள் வெடித்து சிதறியதில் , குப்பைக்கு தீ மூட்டியவர் காயமடைந்துள்ளார்.
அதனை அடுத்து அவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் , சம்பவ இடத்தில் மேலதிக விசாரணைக்காக சென்ற போது குப்பை மூட்டப்பட்ட பகுதிக்கு அண்மையில் இருந்து வெடிக்காத நிலையில் எறிகணை ஒன்றினையும் மீட்டுள்ளனர்.







No comments