வவுனியா ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களும் தடுப்பூசி ஒவ்வாமை காரணமாக வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா இராசேந்திரங்குளம் ஆடைத்தொழிற்சாலையில் நேற்றைய தினம் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டது.
அந்நிலையில் இன்றையதினம் 15 ஊழியர்கள் திடீர் சுகவீனம் அடைந்த நிலையில் வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிலர் ஆடைத்தொழிற்சாலையில் உள்ள சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஊழியர்களுக்கு தடுப்பூசி ஒவ்வாமை காரணமாகவே சுகவீனம் ஏற்பட்டு உள்ளது என முதல்கட்ட தகவல்கள் மூலம் அறிய முடியகிறது
இதேவேளை கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 48 பேர் நேற்றைய தினம் தடுப்பூசி ஏற்றிக்கொண்ட நிலையில் இன்றைய தினம் திடீர் சுகவீனம் ஏற்பட்டமை காரணமாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.







No comments