பனை மரத்திலிருந்து தவறி விழுந்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
சுழிபுரம் வறுத்தோலை பகுதியில் இன்று மாலை நடைபெற்ற குறித்த சம்பவத்தில் , ஐந்து பிள்ளைகளின் தந்தையான மாரிமுத்து அருமைராசா (வயது 54) என்பவரே உயிரிழந்துள்ளார். www.tamilnews1.com
குறித்த நபர் பனை மரத்தில் ஏறிய வேளை மரத்திலிருந்து தவறி விழுந்துள்ளார். அதனை அவதானித்தவர்கள் உடனடியாக நோயாளர் காவு வண்டிக்கு அறிவித்து சங்கானை பிரதேச வைத்திய சாலைக்கு கொண்டு சென்றனர். www.tamilnews1.com
எனினும் வைத்திய சாலைக்கு கொண்டு செல்வதற்கு முன்பதாகவே அவர் உயிரிழந்துள்ளார். என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.
சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். www.tamilnews1.com









No comments