Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பருத்தித்துறை கடலில் 12 மீனவர்கள் கைது


யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் அனுமதிப்பத்திரமின்றி கடலட்டை தொழிலில் ஈடுபட்ட 12 வெளிமாவட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .

கடற்படையினர் இன்று நடத்திய இந்த கைது நடவடிக்கையில் தொழிலுக்குப் பயன்படுத்தி 4 படகுகளும் அவற்றின் வெளியிணைப்பு இயந்திரங்களும் 500 இற்கு மேற்பட்ட கலட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன .

பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து மன்னார் மற்றும் புத்தளம் மீனவர் 12 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் . அவர்களிடம் கடலட்டை பிடிப்பதற்கான அனுமதிப்பத்திரம் இருக்கவில்லை என்று கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர் .

No comments