யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் போலிச் சாராயத்தை உற்பத்தி செய்து விற்பனை செய்து வந்த வந்த இருவர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். www.tamilnews1.com
சீனிப் பாணி, எதனோல், எசன்ஸ் உள்ளிட்டவைகளை உள்ளீடுகளாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட போலி சாராயம் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளுக்கும் விநியோகிக்கப்பட்டு வந்துள்ளது. www.tamilnews1.com
இந்நிலையில் அது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், கோப்பாய் ஜி.பி.எஸ் வீதியில் வீடு ஒன்றினை சுற்றி வளைத்தனர். அதன் போது அங்கு , போலி சாராய உற்பத்தி நடைபெற்று வந்த நிலையில், அங்கிருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 14 போத்தல்கள் போலி சாராயம் கைப்பற்றப்பட்டன. சந்தேக நபர்களிடமிருந்து 140450 பணமும் கைப்பற்றப்பட்டன. www.tamilnews1.com
www.tamilnews1.com








No comments