Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

"லயன் வேண்டாம் நிலம் கொடு " - லெவண்ட் தோட்ட மக்கள் போராட்டம்!


கேகாலை மாவட்டத்தின் எட்டியாந்தோட்டை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட லெவண்ட் தோட்டத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
 
குறித்த தோட்ட லயங்களில் வசிக்கும் 25 குடும்பங்களை சேர்ந்த தோட்ட  மக்களே இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  www.tamilnews1.com 

தமக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும், பாதுகாப்பான இருப்பிடம் வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டதுடன் , தோட்ட அதிகாரிக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  www.tamilnews1.com 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த பகுதியில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில்,  தோட்ட நிர்வாகம் மக்களுக்கு  தற்காலிக கூடாரங்களை வழங்கி,  பாதுகாப்பான இடங்களில் கூடாரங்களை அமைத்து அங்கு தங்கி இருக்குமாறு  தெரிவித்துள்ளனர். www.tamilnews1.com 
 
தோட்ட நிர்வாகம் கூறியவாறு லயன் குடியிருப்புகளுக்கு முன்பாக தற்காலிக கூடாரங்களை அமைத்து அங்கு தங்கி இருந்துள்ளார்கள். 

அந்நிலையில் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கூறிய போதிலும் மக்கள் செல்லவில்லை என தோட்ட நிர்வாகத்தால் , எட்டியாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. 

அதனால் , அப்பகுதி மக்கள் பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் போக்குவரத்து வசதிகள் அற்ற நிலையில் சுமார் 20 கிலோ மீற்றர் தூரம் நடந்து பொலிஸ் நிலையம் சென்று வாக்கு மூலம் அளித்தனர். 

இந்நிலையிலையே இன்றைய தினம் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.   www.tamilnews1.com 

காற்று , இடியுடன் கூடிய மழை காலத்தில் அந்த லயன்களில்  வாழ முடியாது எனவும் ,மண் சரிவு எச்சரிக்கை விடப்படும் போதெல்லாம் நாடோடிகள் போன்று தோட்ட நிர்வாகம் தரும் கூடாரங்களை கொண்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடிக்கொண்டு இருக்க முடியாது என கூறி தமக்கு நிரந்தமாக நிலங்கள் வழங்கப்பட்டு வீட்டு திட்டங்கள் தரப்பட வேண்டும் என கோரியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.   www.tamilnews1.com 





 


No comments