மதுவரித் திணைக்களத்தின் பரிந்துரையின் படி இணையவழியில் பதிவு செய்யப்படும் மதுபான விநியோகத்துக்கு அனுமதிப்பது இல்லை என்று ஆளும் பொதுஜன பெரமுன அரசு முடிவு செய்துள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டம் இன்று நடைபெற்ற போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இணையவழியில் பதிவு செய்யப்படும் மதுபானத்துக்கு கட்டுப்பாடுகளின் கீழ் விநியோகம் செய்ய நிதி அமைச்சு அனுமதியளித்த நிலையில் இன்று இரவு இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, அனுமதி வழங்கிய நிதி அமைச்சின் அமைச்சராக ஆளும் கட்சியான சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச உள்ளமை குறிப்பிடத்தக்கது







No comments