Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில் 24மணி நேரத்தில் 158 பேருக்கு கொரோனா கண்டறிவு!


யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று அதிகரித்த  நிலையிலேயே கானப்படுவதால் பொதுமக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என யாழ் மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்பொழுது  கொரோனா தொற்று குறைந்த நிலைமை இல்லாது அதிகரித்த நிலையிலேயே காணப்படுகின்றது.

நேற்றைய தினம் கிடைக்கப்பெற்ற பிசிஆர் பரிசோதனை முடிவின்படி 139 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று காலை கிடைத்த பி சி ஆர் மற்றும் அன்ரிஜன்  பரிசோதனையில்  19 பேருக்கு  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் யாழில் தொற்றுக்குள்ளானோரின்  எண்ணிக்கை மொத்தமாக 4 ஆயித்து122 ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு இதுவரை வரை 53 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ்  மாவட்டத்தில் 5 கிராம அலுவலர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தன. அதில் ஏற்கனவே தனிமை படுத்தப்பட்ட கிராமங்களில் மூன்று கிராமங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.

நல்லூர் மற்றும் உடுவில் பிரதேச பிரிவுகளில்   இரு கிராம சேவகர்  பிரிவுகள் மாத்திரம் தற்பொழுது  தனிமைப் படுத்தப்பட்டு காணப்படுகின்றது.

யாழில்  2 ஆயிரத்து 42 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 712 நபர்கள் தற்போது சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். தற்பொழுது சற்று  கொரோனா நிலைமை அதிகரித்துச் செல்லும் போக்கு நிலைமை காணப்படுகின்றதே தவிர குறைந்ததாக இல்லை. எனவே பொதுமக்கள் மிகவும் அவதானமாக சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நடந்து கொள்ள வேண்டியதாக இருக்கின்றது .

அதே நேரத்தில் தொடர்ச்சியாக தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா உணவு பொதிகள் வழங்கப்படுகிறது. இந்த வருடம் 7 ஆயிரத்து 588 குடும்பங்களுக்கும்  கடந்த வருடம் 3 ஆயிரத்து 526 பேருக்கு மாக மொத்தமாக 11 ஆயிரத்து 114 பேருக்கு 111 மில்லியன் பெறுமதியான  உணவுப்பொதி  வழங்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் 5 ஆயிரம் ரூபா விசேட கொடுப்பனவு சமுர்த்தி பெறும் குடும்பங்கள், வறிய குடும்பங்களுக்கான கொடுப்பனவாக அரசினால் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது.

யாழில் தற்பொழுது வரை 65 ஆயிரத்து 120 குடும்பங்களுக்கு  வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் மாற்றுத் திறனாளிகள் வயது முதிர்ந்தவர்கள், சிறுநீர், பாதிப்பு உள்ளவர்களுக்கு அடுத்த கட்டமாக இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. அத்தோடு வருமானம் குறைந்து இருக்கும்  குடும்பங்களுக்கும் இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. 

யாழ் மாவட்டத்தில் அத்தியாவசிய சேவைகள் மற்றும் ஏனைய பொது மக்களுடைய  தேவைகளை பூர்த்தி செய்ய  வீடுவீடாகச் சென்று விற்பனை செய்வதற்குரிய அனுமதியினை சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு வழங்கி இருக்கின்றோம்.

அதே நேரத்தில் பொருட்கள்  வீடுகளுக்குச் சென்று விநியோகிகின்றனர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பொது மக்கள் தமக்குத் தேவையான உணவு வகைகளை வீடுகளில் இருந்தவாறே பெற்றுக்கொள்ள முடியும்.

அத்தோடு உணவு வகைகள் மீன் மரக்கறி போன்றவை நடமாடும் விற்பனை நிலையங்கள் மூலம் பொதுமக்களுக்கு கிடைக்க கூடிய தாக  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விலை அதிகரித்தல் தரமற்ற பொருள் விற்பனை  தொடர்பில் கிடைத்த   முறைப்பாடுகளையடுத்து கடந்த ஒரு வார காலமாக பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள் ஒவ்வொரு பிரதேசமாக சென்று நிலைமைகளை களப் பரிசோதனை செய்து வருகின்றார்கள்.

இவ்வாறான சட்டமீறலுக்கு உட்பட்ட வியாபாரிகள் எச்சரிக்கை செய்யப்படுவதோடு சிலருக்கு சட்ட நடவடிக்கையும்  எடுத்திருக்கிறார்கள்.

குறிப்பாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் எரிவாயு மற்றும் இதர உணவு பொருட்கள் ஏனைய பொருட்கள் மரக்கறி போன்றவற்றில் விலை அதிகரிப்பு அவதானத்துக் குட்படுத்தப்பட்டுள்ளது அதனடிப்படையில் தற்போது  களப் பரிசோதனை மேற்கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார்கள் சில சட்டமீறல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுm

மேலும் இக்கட்டான காலகட்டம் என்பதனால் சகல அனுமதிகளும் வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது எனவே பொருள் தட்டுப்பாடு இல்லாதவாறு பொதுமக்களுக்கு பொருட்களை விநியோகிப்பதற்கே  அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனவே இந்த சந்தர்ப்பத்தினை வியாபாரிகள் துஷ்பிரயோகம் செய்யாது பொதுமக்களுக்கு சேவையினை முன்னெடுக்கவேண்டும் 

நடமாடும் சேவைக்கு என சில இடங்களில் அதிக தொகை அறவிட படுவதாகவும் சில இடங்களில்  குறைவாக காணப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது 

எனவே குறித்த விடயங்கள் தொடர்பில் பொதுமக்கள் ஏமாற்றப் படாதவாறு வியாபாரிகளை பரிசோதனை செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் தமது விளைபொருட்களை விற்பனை செய்வதில் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்குரிய தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளது அதேபோல உள்ளூரிலும் அதனைக் கொள்வனவு செய்யக்கூடிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனவே பொதுமக்கள் அநாவசியமான பயணங்களை தவிர்த்து வீடுகளில் இருந்தவாறு தம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் பயணத் தடை கட்டுப்பாடுகள் மக்களை தொற்றிலிருந்து கட்டுப்படுத்தவே ஏற்படுத்தப்பட்டுள்ளன எனவே மக்கள் அதனை உணர்ந்து அதனை அனுசரித்து செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.

No comments