முல்லைத்தீவு மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நெடுங்கேணி கரடிப்பிலவு பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் சிறுநீரக நோய் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த வியாழக்கிழம சிகிச்சை முடித்துக்கொண்டு வீடு திரும்பியிருந்தார்.
எனினும் திடீர் வயிற்று வலி காரணமாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலே மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்போது கோரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டது .
இந்த நிலையில் இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அவர் உயிரிழந்துள்ளார்







No comments