தவறான தகவல்களை பரப்புவோர்களைக் கைது செய்ய சட்ட விதிகள் இருப்பதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
போலியான தவறான ஒளிப்படங்கள் மற்றும் காணொலிகளை சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டால் அதனை வெளியிட்டவரை பிடியாணையின்றி கைது செய்ய பொலிஸாருக்கு அதிகாரம் இருப்பதாக பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
பொய்யான தகவல்களைப் பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இது பொதுமக்கள் மத்தியில் ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.
கோவிட் 19 நோய்த்தொற்று ஒழிப்புத் திட்டத்தை சீர்குலைக்கும். சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்புவதன் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்ட விதிகளுக்கு முரணாக செயல்பட பொதுமக்கள் ஆசையைத் தூண்டும். பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமை மதிக்கப்படுகின்றது.
இலவச ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கவோ அல்லது அடக்கவோ நடவடிக்கை எடுக்கப்படாது.
இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 120, 286, 286(அ), 291 (அ), 291 (ஆ), 345, 365 (பி) 402 , 403 மற்றும் 486 ஆகிய பிரிவுகளின் கீழும். 2007ஆம் ஆண்டின் 56ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் 3ஆம் பிரிவு , 2007ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க கணினிக் குற்றங்கள் தொடர்பான பிரிவு 6, 1979ஆம் ஆண்டில் 48ஆம் இலக்க பயங்கரவாத தடைச் சட்டத்தின் தற்காலிக ஏற்பாட்டின் 2,3ஆம் பிரிவுகள். 1927ஆம் ஆண்டின் 4ஆம் இலக்க பொய்யான கூற்றுப் பிரிவின் 2ஆவது பிரிவு. இவ்வாறான குற்றங்கள் நீதிமன்றின் பிடியாணையின்றி கைது செய்யக்கூடியவையாகும் என பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.







No comments