தற்போது நடைமுறையில் உள்ள முழுமையான பயணத்தடையை எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் நீடிப்பது தொடர்பில் அரச உயர்மட்டத்தில் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. www.tamilnews1.com
நாட்டில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் பயண தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்து ஏனைய தேவைகளுக்கு பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர தடை விதிக்கபப்ட்டுள்ளது. www.tamilnews1.com
கடந்தமாதம் 25ஆம் திகதி அமுலுக்கு வந்த பயண தடை நாளை 7ஆம் திகதி தளர்த்தப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது , பின்னர் 14ஆம் திகதி தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. www.tamilnews1.com
இந்நிலையில் கொரோனா தொற்றின் தீவிரம் குறைவடையாத நிலையில் நாளாந்தம் பெருமளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதனால் , எதிர்வரும் 14ஆம் திகதியும் பயண தடையை தளர்த்த வேண்டாம் என பல தரப்பினரும் அரசை கோரி வருகின்றனர்.
அதனால் தற்போது அரச உயர் மட்டத்தில் பயண தடையை எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் நீடிப்பது தொடர்பில் ஆராயப்படுகிறது.
இதேவேளை நேற்றைய தினம் கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெலே "பயண தடையை எதிர்வரும் 14ஆம் திகதிக்கு பின்னரும் நீடிப்பதற்கு அதிக வாய்ப்புக்கள் உண்டு " என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. www.tamilnews1.com
www.tamilnews1.com







No comments