நாட்டில் நேற்றைய தினம் 3103 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், 40 கொரோனா மரணங்கள் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து இரண்டாயிரத்து 357ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை கொரோனா தொற்றால் உயிரிழந்த 40 பேர் தொடர்பிலும் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களில், 23 ஆண்களும் 17 பெண்களும் உள்ளடங்குகின்றனர். அதன் மூலம் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு ஆயிரத்து 696 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் கட்டுப்பாடு இறுக்கமாக்கப்பட்டுள்ள போதும், கடந்த சில தினங்களாக தினசரி தொற்றாளர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







No comments