Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பயணத்தடையை நீக்குவதா ? நீடிப்பதா ? என்பது மக்களின் செயற்பாடுகளின் தான் தங்கியுள்ளது!




நாட்டில் அமுலில்  உள்ள பயணத்தடை 14ம் திகதிக்கு பின் நீக்கப்படுவதும், நீடிக்கப்படுவதும் மக்களின் கைகளிலேயே உள்ளதென பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  www.tamilnews1.com 

மேலும் தெரிவிக்கையில்,  www.tamilnews1.com 

தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் மக்கள் நாட்டில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தமது ஒத்துழைப்பைச் சுகாதாரத்துறைக்கு வழங்க வேண்டும்.  www.tamilnews1.com 

பயணத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ள காலகட்டத்தில் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தால் மட்டுமே ஜூன் 14 அன்று நாட்டை மீண்டும் திறக்க முடியும். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிச் செல்ல வேண்டும். www.tamilnews1.com 

நேற்று மட்டும் தனிமைப்படுத்தல் விதிகளை மீறியதற்காக 975 பேர் கைதுசெய்யப்பட்டனர்.  அத்தோடு, மேல் மாகாணத்துக்குள் வரும் 14 நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் உள்ள சோதனைச்சாவடிகளில் 59 ஆயிரத்து 280 வாகனங்கள் கொழும்புக்குள் நுழைந்துள்ளதாக பதிவாகியுள்ளன என்றும் மேலும் குறிப்பிட்டார். www.tamilnews1.com 

www.tamilnews1.com 

No comments