பாடசாலைகள் எதிர்வரும் ஜூன் 29ஆம் திகதி முதல் மீண்டும் திறக்கப்படும் என்று சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல்களில் எதுவித உண்மையும் இல்லை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது..
இதுதொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவிக்கையில் , பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை. சுகாதார பிரிவின் ஊடாக பெற்றுக்கொள்ளப்படும் பரிந்துரையை கருத்திற்கொண்டு பாடசாலைகளை திறப்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.







No comments