Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நரகாசூரனாக சீமான்!




நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ராஜ அலங்காரத்தில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில்வைரலாகி வருகிறது.  www.tamilnews1.com 

அது, பழுவேட்டையர் வேடம் என்றும் தொல்காப்பியர் வேடம் என்றும் சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.  www.tamilnews1.com 


ஆனால், அது இயக்குநர் வேலு பிரபாகரனின் இயக்கத்தில் வெளியாகவிருந்த
ஒரு திரைப்படத்தின் போட்டோ ஷூட் புகைப்படங்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. www.tamilnews1.com 

ஒரு இயக்குநரின் காதல் டைரி, கடவுள் ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் வேலு பிரபாகரன். இவர் கடந்த 2018-ம் ஆண்டு கடவுள் படத்தின் இரண்டாவது பாகத்தை எடுப்பதாக இருந்தார்.   www.tamilnews1.com  


அந்தத் திரைப்படத்தில் நரகாசுரன் கதாபாத்திரத்தில் சீமான் நடிப்பதற்காக போட்டோ ஷீட் செய்யப்பட்ட படங்கள்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடவுள் படத்தின் முதல் பாகத்தில், மணிவண்ணன், ரோஜா, மன்சூர் அலிகான் ஆகியோரோடு வேலு பிரபாகரனும் நடித்திருந்தார்.

தற்போது இணையத்தில் வைரலாகி வரும் , இந்தப் புகைப்படத்தோடு, ''இந்தப் புகைப்படம் ஒரு அரிதான ஒன்று. வரலாற்றில் ஆரியக் கலப்புக்கு முன்பு ஒரு தமிழ் மன்னன் எப்படி இருப்பான் என்ற ஒரு பிம்பத்தை இப்படி சீமானைத் தவிர வேறு யாராலும் முழுமை செய்ய முடிந்திருக்காது. (நரகாசூரன் ) வேலு பிரபாகரனைத் தவிர யாராலும் இதைக் கற்பனை செய்து நடைமுறைப்படுத்தி இருக்க முடியாது. இந்தத் திரைப்படம் வந்திருந்தால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கக் கூடும்'' என முகநூலில் ஒருவர் பதிவிட, அதை தன் பக்கத்தில் பகிர்ந்து நன்றி தெரிவித்திருக்கிறார் இயக்குநர் வேலு பிரபாகரன்.

இது குறித்து நாம் தமிழர் கட்சியினரிடம் கேட்ட போது, '' எப்போதோ எடுத்த புகைப்படங்களை சிலர் வேண்டுமென்றே தற்போது பரப்பி வருகின்றனர்'' என கோபமாக தெரிவித்தனர்.  www.tamilnews1.com 

நன்றி :- விகடன்.   www.tamilnews1.com 

www.tamilnews1.com 

No comments