Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நேற்று ; யாழில்.152 பேருக்கு கொரோனா - நாட்டில் 39 பேரின் மரணம் தொடர்பிலும் அறிவிப்பு!

 


யாழ்.மாவட்டத்தில் 152 பேர் உட்பட வடக்கில் 213 பேருக்கு நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தேசிய கொவிட் தடுப்புக்கான செயற்பாட்டு மையம் இன்று காலை வெளியிட்டுள்ள நிலவர அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

அதன் பிரகாரம் , யாழ்ப்பாணம் -152, முல்லைத்தீவு -23, வவுனியா – 22, கிளிநொச்சி -13 மற்றும் மன்னாரில் 03 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதேவேளை  நாட்டில் மொத்தம் 3,306 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவற்றுடன் , நோயாளர் தொகை 192,546 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நேற்று 39 கொரோனா மரணங்கள் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றுடன் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,566 ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments