Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கொரோனா தடுப்பூசிக்கு மரணங்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு


Alpha, Beta, Gamma, Delta போன்ற வைரஸ் திரிபுகளினால் ஏற்படும் கடுமையான நோய் நிலை மற்றும் ஏற்படக்கூடிய மரணங்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொரோனா தடுப்பூசிக்கு உண்டு என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் திருமதி நீலிகா மலவீகே தெரிவித்தார்.

இதனால் கொரோனா வைரஸுக்கான தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் அனைவரும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், Alpha என்ற வைரஸ் திரிபு பிரிட்டனில் கண்டறியப்பட்டதாகும். Beta, Gamma பிரேசில் கண்டறியப்பட்ட வைரஸ் வகைகளாகும்

இதே போன்று இந்தியாவில் கண்டறியப்பட்ட Delta என்ற வீரியமிக்க வைரஸையும் ஒன்றாகும். Delta வைரஸை பொறுத்தவரை இது தற்போது உலகில் வேகமாக பரவிவருகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்கள் மிக பாதிப்புக்கு உள்ளாவதாக ஆரம்ப ஆய்வுகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்தியாவில் இதனால் பாதிக்கப்பட்டவர்களின் நிலைமைகளை நாம் காண்கின்றோம். இது இலங்கையில் காணப்பட்டால் இதன் பாதிப்பு குறித்து பலரும் கவலையடைவது வழமை. இது தெமட்டகொடை பிரதேசத்தில் ஒரு இடத்தில் கண்டுபிடிக்கபட்டுள்ளது.

இவ்வாறான அதாவது Alpha, Beta, Gamma, Delta போன்ற வைரஸ் திரிபுகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள சிறந்த வழி இலங்கையில் தற்போது பயன்பாட்டிலுள்ள வைரஸ் தடுப்பூசி சிறந்ததாகும்.

விசேடமாக குளிரூட்டப்பட்ட வாகனங்கள் குளிரூட்டப்பட்ட அறைகள் முதவானவற்றில் வைரசு காற்றின் மூலம் பரவுவதற்கான வாய்ப்பு உண்டு என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் திருமதி நீலிகா மலவீகே மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, அவ்வப்போது புதிதாக கண்டுபிடிக்கப்படும் திரிபுபட்ட கொரோனா வைரஸ் தொடர்பாக தகவல்கள் பெறப்படும் தகவல்கள் குறுகிய காலத்தில் ஆய்வு செய்யப்பட்ட மிகச் சிறிய மாதிரிகளிலிருந்து பெறப்படுவதால் எதிர்காலத்தில் புதிய தரவு கிடைப்பதன் மூலம் நிலைமை மாறக்கூடும் என்று சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பில் இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வகை வைரஸ் இலங்கையில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

இதுபோன்ற வைரஸ் பிறழ்வு ஏற்படும் போது, இது மற்ற வைரஸ்களை விட வேகமாக பரவக்கூடியது புதிதாக கண்டறியப்பட்ட வைரஸ் வகைகள் முந்தைய வகைகளை விட மக்களிடையே எளிதில் பரவுகின்ற தன்மை அதிகம் என்றும் சுகாதார மேம்பாட்டு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

No comments