Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

கொக்குவிலில் வீடு புகுந்து வன்முறை கும்பல் அட்டகாசம் - பொருட்கள் சேதம்!


கொக்குவில் மேற்கில் இரண்டு வீடுகளுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் ஒன்று,   அங்கு இருந்த  பெறுமதியான பொருட்களை அடித்து சேதப்படுத்திவிட்டு தப்பித்துள்ளது.

இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

6 மோட்டார் சைக்கிள்களில் வாள், இரும்பு கம்பி மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வந்திறங்கிய 9 பேர் கொண்ட கும்பல் இரண்டு வீடுகளுக்குள் புகுந்து பெறுமதியான தளபாடங்களை அடித்துடைத்து அடாவடியில் ஈடுபட்டுள்ளது.

வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் இந்த வன்முறைக் கும்பல் அடாவடியில் ஈடுபட்டதாக பொலிஸார் கூறினர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்







No comments