Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பழைய முறிகண்டி பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் படுகாயம்


முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பழைய முறிகண்டி பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

“முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ-9 வீதியின் பழைய முறிகண்டி பகுதியில் 236 ஆறாவது கிலோமீற்றருக்கும் 237 ஆவது கிலோ மீற்றருக்கும் இடைப்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து கொண்டிருந்த நபர் மீது காட்டு யானை தாக்கியுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த நிலையில் வீதியால் சென்றவர்களால்  அவர் மீட்கப்பட்டு மாங்குளம் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நேற்று (செவ்வாய்கிழமை) இரவு 8 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் படுகாயமடைந்தவர் திருமுருகண்டி பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய பிரான்சிஸ் சத்தியதரன்  எனும் குடும்பஸ்தர் என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ இடத்திற்கு  வருகை தந்த கிளிநொச்சி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் யானையை காட்டுக்குள் விரட்டி விடுகின்ற  நடவடிக்கைகளை  மேற்கொண்டுள்ளதுடன், சம்பவ இடத்திற்கு வருகை தந்த மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments