யாழில் இராணுவத்தினர் மணல் கொள்ளையர்களை சுற்றி வளைத்த போது , கொள்ளையர்கள் தப்பி செல்ல முயன்ற போது உழவு இயந்திர சக்கரம் உடைந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. www.tamilnews1.com
அந்நிலையில் ஒருவரை இராணுவத்தினர் கைது செய்து கொடிகாம பொலிசாரிடம் ஒப்படைத்திட்டுள்ளனர். www.tamilnews1.com
சாவகச்சேரி - கச்சாய் பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கச்சாய் பகுதியில் கும்பல் ஒன்று மணல் கொள்ளையில் ஈடுபடுவதாக இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இராணுவத்தினர் அப்பகுதிக்கு விரைந்து கொள்ளையர்களை சுற்றி வளைத்து கைது செய்ய முயன்றனர். www.tamilnews1.com
அதன் போது இராணுவத்தினரை கண்ட மணல் கொள்ளையர்கள் உழவு இயந்திரத்துடன் தப்பி செல்ல முற்பட்டனர். அதன் போது உழவு இயந்திரத்தின் முன் சக்கரம் உடைந்து விபத்துக்கு உள்ளது. www.tamilnews1.com
அந்நிலையில் ஒருவர் இராணுவத்தினரிடம் சிக்கிக்கொள்ள ஏனையவர்கள் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர். www.tamilnews1.com
தம்மிடம் சிக்கிக்கொண்டவரை கைது செய்த இராணுவத்தினர் அவரை சாவகச்சேரி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதுடன் , விபத்துக்கு உள்ளான உழவு இயந்திரத்தையும் பொலிசாரிடம் பாரப்படுத்தி உள்ளனர்.
சாவகச்சேரி பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். www.tamilnews1.com
www.tamilnews1.com







No comments