கதிர்காமம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றைய தினம் இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த 52 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட விரோதம் காரணமாகவே துப்பாக்கி சூடு நடைபெற்றதாகவும் , துப்பாக்கி சூட்டை மேற்கொண்ட நபரை தாம் அடையாளம் கண்டு கொண்டுள்ளதாகவும் , குறித்த நபர் யால காட்டுக்குள் சென்று தலைமறைவாகி உள்ள நிலையில் அவரை கைது செய்தவற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments