பாகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தானின் தூதுவரின் மகள் கடத்தப்பட்டது சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டிற்கு செல்லும் வழியில் அவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டார் என்றும் அவரது உடலில் காயங்கள் காணப்படுவதாகவும் ஆப்கானிஸ்தானின் வெளிவிவகார அமைச்சு குற்றம் சாட்டியுள்ளது.
இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் நீண்ட காலமாக சிதைந்து போயுள்ள நிலையில் 20 வயதான ஆப்கானிஸ்தானின் தூதுவரின் மகள் கடத்தப்பட்டுள்ளார்.
விடுதலையின் பின்னர் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் குறித்த மனிதாபிமானமற்ற தாக்குதலை கண்டிப்பதாக ஆப்கானிஸ்தானின் தூதுவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ள ஆப்கானிஸ்தானின் வெளிவிவகார அமைச்சு, இராஜதந்திரிகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்குமாறு பாகிஸ்தானை வலியுறுத்தியுள்ளது







No comments