கோப்புப்படம்
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பரப்பில் மிதந்து வந்த 135 கிலோ கஞ்சா போதைப்பொருளை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
காங்கேசன்துறை கடற்பரப்பில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மர்ம பொதி ஒன்று மிதந்துள்ளது. அது தொடர்பில் அறிந்த கடற்படையினர் குறித்த பொதியினை மீட்டு சோதனையிட்ட போது , அதனுள் கஞ்சா போதை பொருள் பொதி செய்யப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது.
குறித்த பொதியினை கரைக்கு எடுத்து வந்த கடற்படையினர் சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments