Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஆபாச படங்கள் எடுத்த குற்றச்சாட்டில் ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது!


ஆபாசப் படங்களைத் தயாரித்து அதை மொபைல் ஆப்களில் வெளியிட்டதாகக் கூறி, பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும் தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா உள்ளிட்ட 11 பேரை மும்பை காவல்துறை கைது செய்துள்ளது என இந்துஸ்தான டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

45 வயதான ராஜ் குந்த்ரா இந்த குற்றத்தில் முக்கிய பங்காற்றியிருப்பதாகவும், அதற்கான அனைத்து ஆதாரங்களும் காவல்துறையிடம் இருப்பதாகவும் மும்பை காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா மீது தகவல் தொழில்நுட்பச் சட்டம், ஐபிசி 420, 292, 293, பெண்களைத் தவறாகச் சித்தரித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆபாசப் படங்களைத் தயாரித்து அதை சில செயலிகள் (apps) வழியாக வெளியிட்டது தொடர்பாகக் கடந்த பிப்ரவரி மாதம் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் தொடர்ச்சியாக ராஜ் குந்த்ராவை காவல்துறை நேற்று கைது செய்தது.

வெப் சீரியஸ் மற்றும் குறும்படங்களில் நடிக்க வாய்ப்பு வழங்குவதாகக் கூறி அழைத்து, ஆபாசப் படத்தில் நடிக்கும்படி கட்டாயப்படுத்தியதாக ஒரு பெண் ராஜ் குந்த்ராவுக்கு எதிராகக் கடந்த பிப்ரவரி மாதம் மும்பை காவல்துறையில் புகார் அளித்தார்.

இதைத் தொடர்ந்து, மும்பையின் மாத் பகுதியில் உள்ள ஆடம்பர வீட்டினை குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை செய்து, ஐந்து பேரைக் கைது செய்தனர்.

ஆபாசப் படத்தின் இயக்குநர் என கருதப்படும் ரோவா கான், புகைப்பட கலைஞர் மோனு சர்மா, கலை இயக்குநர் பிரதிபா நலாவடே ஆகியோருடன் அரிஷ் ஷேக் மற்றும் பானு தாக்கூர் என்ற இரண்டு நடிகர்களும் இந்த சோதனையின் போது கைது செய்யப்பட்டனர்.

நன்றி :- BBC

No comments