Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழில்.நேற்று 148 பேருக்கு கொரோனா - அனைவரும் வீட்டில் இருங்கள்!


யாழ்.மாவட்டத்தில் கொரோனா அபாயம் மிக தீவிரமடைந்துள்ள நிலையில் பொதுமக்கள் தம் வீடுகளில் பாதுகாப்பாக இருப்பது சிறந்தது என யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன்  மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். 
 
இதன்போது மேலும் கூறுகையில், 
 
யாழ்.மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 148 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் மாவட்டத்தில் தொற்றாளர்கள் எண்ணிக்கை 10166 ஆக உயர்ந்துள்ளதுடன், கொரோனா மரணங்கள் 200ஆக உயர்ந்திருக்கின்றது. இந்த அதிகரிப்பின் பெரும் பகுதி மே மாதத்தின் பிற்பகுதியில் நடந்ததாகும்.

மேலும் தற்போது தினசரி தொற்றாளர்கள் எண்ணிக்கை சராசரியாக 130 வரை காணப்படுகின்றது. இது மோசமான அதிகரிப்பாகும். இந்நிலையில் மாவட்டத்திலுள்ள மக்கள் தங்களை முடக்கிக் கொண்டு அரசு அறிவித்துள்ள 10 நாட்களில் வீடுகளில் இருப்பது எமது மாவட்டத்தையும், நாட்டையும் மோசமான நிலையிலிருந்து மீட்பதற்கு உதவியாக இருக்கும். 

எனவே மக்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வது பாதுகாப்பானாது என தெரிவித்தார். 

No comments