Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வாள் வெட்டு சந்தேகநபர் கைது - கொள்ளையிடப்பட்ட மோட்டார் சைக்கிளும் மீட்பு


வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நபரொருவரை  தெல்லிப்பளைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். 
 
யாழ்ப்பாணம் - அளவெட்டி, நாகினாவத்தை பகுதியில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவரே  நேற்று  இரவு கைது செய்யப்பட்டு்ள்ளார். 
 
கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுகளில் பல வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் என பொலிஸார் கூறியுள்ளனர்.
 

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 2 வாள்கள் மற்றும்  சந்தேகநபரால் கொள்ளையிடப்பட்ட இலக்க தகடற்ற இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஆகியனவும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
 
சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை  பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments